AstraZeneca தடுப்பூசிகளைப் பெற மலேசியா ஒப்பந்தம்..!

0

மலேசியா, கொரோனா தடுப்பூசிகளை வாங்க, AstraZeneca நிறுவனத்துடன் நாளை ஒப்பந்தம் செய்துகொள்ளவிருக்கிறது. சுமார் 20 விழுக்காட்டு மலேசிய மக்களுக்கு அத் தடுப்பூசி செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, Pfizer-BioNTech நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மக்கள்தொகையில் மேலும் 20 விழுக்காட்டினருக்கான தடுப்பு மருந்தை மலேசியா வாங்கியிருக்கிறது.

Pfizer-BioNTech தடுப்பூசிகளின் முதல் தொகுதியை அது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பெற்றுக்கொள்ளவிருக்கிறது.

மக்கள்தொகையில் மேலும் சுமார் 10 விழுக்காட்டினருக்கு தடுப்பு மருந்தைச் செலுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
மக்கள்தெகையில் 70 விழுக்காட்டினருக்குப் போதுமான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள மலேசியா முனைகிறதாக குறிப்பிடப்படுகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here