COVID-19 கிருமிப் பரவல் – கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் : சீனாவை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

0

சீனா, COVID-19 கிருமித்தொற்று பற்றித் தெரிந்தே நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அதற்கான பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கிருமித்தொற்று தொடங்கியபோதே சீனா அதைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம், அதைச் செய்யத் தவறியதால் தற்போது உலகமே பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கிருமித்தொற்று தொடர்பாகத் தெரியாமல் தவறுகள் நடந்திருந்தால் பிரச்சினை இல்லை ஆனால் சீனா, தெரிந்தே செய்திருந்தால் அது பெரிய குற்றம் என்றார் அதிபர் டிரம்ப்.

கிருமித்தொற்று தொடங்கியபோதே அமெரிக்க அதிகாரிகளை வூஹானுக்குள் சீனா அனுமதித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்யவில்லை என்று திரு. டிரம்ப் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்று தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

சீனாவில் கிருமித்தொற்றால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் சந்தேகத்துக்குரியது என்றும் திரு. டிரம்ப் தெரிவித்தார்.  

Leave a reply

Please enter your comment!
Please enter your name here