சுங்கை தெங்கா விடுதியில் வெளிநாட்டு ஊழியர் மரணித்த நிலையில் காணப்பட்டார்! விசாரணை ஆரம்பம்..!

0

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சுங்கை தெங்கா (Sungei Tengah) விடுதியில் மரணித்த நிலையில் கண்டறியப் பட்டது. இதன் பின் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

500 Old Choa Chu Kang Road இல் இடம்பெற்றிருக்கும் இவ் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து (டிசம்பர் 26) அன்று காவல்துறைக்கு தகவல் வந்ததாக கூறியது.

புதிய இந்திய ஊழியர்கள் மற்றும் வேலை அனுமதி வைத்திருப்போர் சிங்கப்பூர் வர அனுமதி..!

அந்த 29 வயது நபர், ஒரு அறையில் அசைவற்ற நிலையில் காணப்பட்டதோடு அங்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் அவர் மரணித்துவிட்டார் என கூறினார்கள்.

மரணித்தவரின் குடும்பத்தினருக்கு மனிதவள அமைச்சு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.

மேலும், மரணித்தவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்க, அந் நபரின் முதலாளியுடனும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்துடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக மனிதவள அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here