சிங்கப்பூரில் தடுப்பூசி ஏற்றப்படும் வரை முகக் கவசம் அணிதல் வேண்டும்! நிபுணர் குழு..!

0

COVID-19 தடுப்பூசி நிபுணர் குழு, சிங்கப்பூரில் உள்ளோர்களில் பொரும்பாலானோருக்கு Pfizer-BioNTech தடுப்பூசி போடும் வரை, முகக்கவசங்கள் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல் எனபவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

COVID-19 தடுப்பூசி நிபுணர் குழு முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளுக்கும் சிங்கப்பூர் அரசு இன்று உடன்பட்டது.

புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள்..!

அவற்றுள், தடுப்பூசியானது எவ்வளவு நாள் வரை தமது உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் உடலில் வைரசுக்கு எதிராக எவ்வாறு போராடும் போன்றவற்றின் உண்மைத்தன்மை கிடைக்கும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறையில் இருக்க வேண்டுமென அக்குழு குறிப்பிட்டது.

தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என குறிப்பிட்டது. அவர்களுள் வயதானவர்கள் முக்கியமாகும்.

Pfizer-BioNTech நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி நோய்த்தொற்றுக்கு எதிராக நூற்றுக்கு 95 விழுக்காடு செயல்திறன் கொண்டதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

COVID-19 தடுப்பூசி சிங்கப்பூரில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் போடப்படுகிறது. அதில் முதலாவதாக சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கும் ஏற்றப்படுமென கூறப்படுகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here