தடுப்பு மருந்து ஏற்ற விரும்பாதோர் அதிகமான பரிசோதனைகளை எதிர்நோக்க நேரிடும் – அமைச்சர் வோங்..!

0

அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong), COVID-19 தடுப்பூசிகளை ஏற்ற விரும்பாதோர், மேலும் அதிகமான பரிசோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் COVID-19 அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் தலைவராகவும் செயற்படுகிறார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், கிருமித்தொற்று அபாயம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வோர் மேலும் பலன்களை எதிர்பார்க்கலாம்.அதனை ஏற்ற விரும்பாதோர் மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை எதிர்நோக்கலாமென கூறினார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு எதிராக மக்களிடையே கூட்டு தடுப்பாற்றால் உருவானாலும், உலக அளவில் கிருமித்தொற்று நீடிக்கும்வரை சிங்கப்பூரிலும் கிருமி தொற்றும் ஆபத்து நீடிக்கும் என்று செய்தியாளர் நிகழ்வொன்றில் கூறப்பட்டது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here