கிருமிப்பரவலைக் கையாண்ட விதத்தில் சிங்கப்பூர் தனித்து நிற்கிறது! பிரதமர் லீ..!

0

பிரதமர் லீ சியென் லூங் COVID-19 பற்றிய தகவல்களை வெளியிடுவதில் அரசாங்கம் வெளிப்படை தன்மை உடையதாக இருந்ததால், சிங்கப்பூரானது COVID-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் கையாண்ட விதமானது தனித்து நிற்பதோடு, சிங்கப்பூரர்களின் நம்பிக்கையையும் வென்றுள்ளதாக கூறியிருக்கிறார்.

இச் செயலானது சிங்கப்பூர் சமூகத்தில் பெரிய அளவிலான இடைவெளியை அது தவிர்க்க உதவியதாகவ பிரதமர் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டார்.

நோய்ப்பரவலுக்கு எதிரான 3ம் கட்டப் போராட்டத்தில் தளர்ந்துவிடக்கூடாது என திரு.லீ அவர்கள் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

பின்வரும் செயற்பாடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டார்

1.ஊழியர்களும் வர்த்தகங்களும் எதிர்கொண்ட இன்னல்களை சமாளிக்க, 100 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 5 வரவுசெலவுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
2.சுய-தொழில் புரிவோருக்கும் முதல் தடவை உதவி வழங்கப்பட்டது.
3.வேலை இழந்தோர் புதிய வழிகளைக் கற்றுக் கொண்டனர்
மற்றும் காலியான வேலைகளுடன் இணைக்கப்பட்டனர்.

மேலும், நிலைமையானதை முன்னேற்றம் கண்டாலும், பொருளியலானது சிங்கப்பூரில் முழுமையாக பழைய நிலைமையை அடையவில்லை என பிரதமர் கூறினார்

2021ம் ஆண்டில் பொருளியல் மீட்சி காணுமென நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், இந்த நெருக்கடிநிலையில் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம், மேலும் உறுதியாக மீண்டு வர முடியும் என்று அவர் சிங்கப்பூரர்களுக்கு கூறினார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here