டெல்லி விமான நிலையத்தில் பிரேக் போடாததால் பின்னோக்கி நகர்ந்த சிங்கப்பூர் விமானம்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A380, நவம்பர் 25 அன்று டெல்லி விமான நிலையத்தில் நிறுத்திய பிறகு பிரேக் போடாததால் சிறிது நேரம் பின்னோக்கி நகர்ந்தது.
ஏர்பஸ் ஏ380 விமானத்தில் மொத்தம் 459 பயணிகள் மற்றும் 25 பணியாளர்கள் இருந்தனர். சிங்கப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு SQ406 என்ற விமானத்தை இயக்கி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இரவு 8 மணி அளவில் வந்தடைந்தது.
பின்னோக்கி நகர்ந்த
விமானத்தை நிறுத்த விமானி உடனடியாக பிரேக்கைப் பயன்படுத்தினார். விமானம் நின்றவுடன், விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் கொடுத்தனர் மற்றும் தரைப் பணியாளர்கள் பாதுகாப்பாக விமானத்தை அதன் நியமிக்கப்பட்ட பார்க்கிங் பேக்கு இழுத்துச் சென்றனர், என்று SIA செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பணிப்பெண் ஒருவருக்கு தொடையில் சிறு காயம் ஏற்பட்டது வேறு எந்த பயணிகளுக்கும் காயங்கள் ஏற்படவில்லை, மேலும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.
காயமடைந்த பணிப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் பணியைத் தொடர அனுமதி அளிக்கப்பட்டது
சம்பவத்திற்கான காரணத்தை SIA விசாரித்து வருகிறது.