விரைவாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவதற்கான TEP. மூன்று மாதங்களுக்குள் என்ன செய்ய வேண்டும்..!

0

சிங்கப்பூரில் பணிபுரிய பல வகையான பாஸ்கள் உள்ளன. அவற்றுள் Training Employment Pass (TEP) பற்றி பலருக்குப் பரிச்சயம் இருக்காது.

கடந்த செப்டம்பரில் இருந்து பாஸ்களுக்கான அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளதால், TEP பாஸ் மூலம் சிங்கப்பூரில் ஆட்சேர்ப்பும் அதிகரித்துள்ளது.

Training Employment Pass (TEP) பற்றிய முக்கிய குறிப்புகள்

  • யாருக்கானது – சிங்கப்பூரில் பயிற்சி பெற விரும்பும் தகுதியான வெளிநாட்டு மாணவர்கள் அல்லது வெளிநாட்டு பயிற்சியாளர்கள்(trainees).
  • யார் பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் –  ஒரு நிறுவனம் / முதலாளி பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
  • யார் செல்லுபடியாகும் கால வரையரை – 3 மாதங்கள் வரை.
  • பாஸ் புதுப்பிக்கத்தக்கதா? – இல்லை
  • குடும்பங்களுக்கான பாஸ் இருக்கிறதா? – இல்லை
  • வெளிநாட்டு தொழிலாளர் வரி அல்லது ஒதுக்கீடு பற்றி –  வரி அல்லது ஒதுக்கீடு தேவையில்லை.

சிங்கப்பூர் செல்ல Skilled Test கான சிறந்த 4 நிறுவனங்கள்..!

Training Employment Pass (TEP) விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

நீங்கள் ஒரு வெளிநாட்டு மாணவர் அல்லது வெளிநாட்டு அலுவலகம் அல்லது துணை நிறுவனத்தில் இருந்து பயிற்சி பெறுபவர் என்றால் நீங்கள் Training Employment Pass இற்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஒரு வெளிநாட்டு மாணவராக இருந்தால்:

  • சிங்கப்பூரில் உள்ள Training Attachment உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய Institute இல் படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் $3,000 நிலையான மாதச் சம்பளத்தைப் பெற வேண்டும்.
  • நன்கு நிறுவப்பட்ட சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தால் நீங்கள் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டு அலுவலகம் அல்லது துணை நிறுவனத்தில் இருந்து பயிற்சி பெறுபவர் என்றால்:

  • நீங்கள் குறைந்தபட்சம் $3,000 நிலையான மாதச் சம்பளத்தைப் பெற வேண்டும்.
  • நன்கு நிறுவப்பட்ட சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தால் நீங்கள் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.

குறிப்பு: இதற்கு முன் நீங்கள் Training Employment Pass வைத்திருந்தால், அதே வகையான பயிற்சிக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியாது.

இந்த பாஸுக்கு விண்ணப்பித்தால் அதிகபட்சம் 10 நாட்களில் சிங்கப்பூரை அடையலாம். இதற்கு தனிமைப்படுத்தல் இல்லை. நேரடியாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினால், அவர்களின் நிறுவனத்திற்குச் செல்லலாம். இதற்காக $6000 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

TEPல் வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக $20 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்கப்படும். 3 மாதம் முடிவதற்குள் நீங்கள் சிங்கப்பூரிலேயே டெஸ்ட் அடித்து பாஸ் ஆகிவிட்டால் construction, manufacturer போன்ற வேலைகள் மாற்றி கொடுக்கப்படும்.

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதற்கான Skilled Test இல் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்களா? நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஆபத்து..!

Training Employment Pass விண்ணப்பத்தை சமர்ப்பதற்கு தேவையான ஆவனங்கள்

  • உங்களின் பாஸ்போர்ட்டின் தனிப்பட்ட விவரங்கள் பக்கம்.
  • Training இன் நோக்கம், Training இன் வகை, இடம் மற்றும் Training காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும் விரிவான விபரம்.
  • உங்களின் கல்வி ஆவணங்கள். நீஙள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை என்றால், நீங்கள் தற்போது படிப்பைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம்.

தற்போதைய சூழலில் இந்த பாஸ் மூலம் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த பாஸ் மூலம் சிங்கப்பூர் வந்து, இங்குள்ள சூழலை அறிந்து, வேலை வாய்ப்புகளை தெரிந்து கொண்டால், தேர்வெழுதுவது எளிதாக இருக்கும் என, கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.