இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருக்கிறது..! வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்…!
இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருப்பதாக சிங்கப்பூர்வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.விதிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக நடைமுறை மூலம் அது சாத்தியமாகும் என்று அவர்சொன்னார்.
ஆசியாவின் ஆற்றலுக்கும், பன்முகத்தன்மைக்கும் ஏற்ப அனைத்துலக நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார். சுமார் 300 அதிகாரிகளும், வர்த்தகத் தலைவர்களும் கலந்து கொண்ட டில்லி கலந்துரையாடலில் அவர்பேசினார்.
தென்கிழக்காசியாவுடன் இந்தியா இன்னும் அதிகமாகப் பொருளியல் ஒத்துழைப்பில் ஈடுபட வேண்டும் என்றுடாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். குறிப்பாக, வர்த்தகம், புதிய தொழில்நுட்பங்கள், மின்னிலக்கமயம் ஆகியவற்றில் முதலீட்டை அதிகப்படுத்தலாம்என்றார் அவர்.
மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக டாக்டர் பாலகிருஷ்ணன் இந்தியா சென்றுள்ளார்.