ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த சில விதிமுறைகள்..!
சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய விதிமுறைகள் சில நடைமுறைக்கு வந்துள்ளன.
18 வயதுக்கு மேலானோர் தங்கள் ஆரோக்கிய நிலை குறித்துத் தெரிவித்து இரண்டாவது பூஸ்டர்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு, இதயச் செயலிழப்பு, ஆஸ்துமா, ஈரல் அழற்சி, பக்கவாதம், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வோர் உள்ளிட்டவர்களுக்கு இது முக்கியாமாக பொருந்தும்.
நுரையீரல் தொற்று நோயாளிகளுக்கு மருந்தகங்களில் கட்டண சலுகை வழங்கப்படும்.
மிதமான நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே குணம் அடைய தொலைமருத்து சேவை வழங்கப்படும்.
இருப்பினும் வீட்டிலேயே குணம் அடையப் பரிந்துரைக்கப்பட்டோருக்குக் கட்டணச் சலுகைதொடர்ந்து வழங்கப்படும்.
புகைபிடிப்பதற்கான தடை கூடுதலான இடங்களுக்கு நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், 10 கடற்கரைகள், பொதுப் பயனீட்டுக் கழகத்தின் துடிப்புமிக்க, அழகான, தூய்மையான நீர்நிலைகள் திட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் இடங்கள்அனைத்திற்கும் இது பொருந்தும்.
வேலை அனுமதிச் சீட்டுடன் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை சிங்கப்பூரில் வைத்திருக்கவோ பயன்படுத்தவோ அனுமதி இல்லை.