ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது.
ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது. அதன் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேற ரஷ்யச் செல்வந்தர்கள் முயற்சி செய்வதாக பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 15,000 ரஷ்யச் செல்வந்தர்கள் நாட்டை விட்டு வெளியேற இடம்பெயர்வு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சு கூறியது.
ரஷ்யா உக்ரேன் மீது தொடுத்த போரினால் நாட்டின் வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
போரினால் பொருளாதாரத்திற்கு நீண்டகாலச் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் நிலைமை சரியாக நெடுங்காலம் ஆகும் என்றும் பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு நேற்று (17 ஜூன்) தெரிவித்தது.
இதற்கிடையே ரஷ்யா உக்ரேனின் செவரோடானியஸ்க் (Sievierodonetsk) வட்டாரத்தை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
உக்ரேனின் கிழக்குப்பகுதியில் ரஷ்யா நடத்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக உக்ரேனியப் படையினர் தாக்குப்பிடித்து நிற்பதாக அதிகாரிகள் கூறினர்.