வெளிநாட்டு ஊழியர்கள் வாழ கடினமான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்..!
நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து பல நாடுகளின் மக்களின் வாழ்கக்கைத் தரம் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மக்களின் இயல்பு நிலையை மோசமாக பாதித்தது.
ECA இண்டர்நேஷனல் எனும் ஆய்வு நிறுவனம், வாழ்க்கைச் செலவினம் பற்றிய ஆய்வொன்றைமேற்கொண்டது.
அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வசிப்பதற்கு விலைவாசி மிகவும் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் ஹாங்காங், நியூயார்க், ஷாங்ஹாய் ஆகியவை விலைவாசி அதிகம் உள்ள முதல் மூன்று நகரங்களாகக்குறிப்பிடப்பட்டன.
அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வசிப்பதற்கு விலைவாசி மிகவும் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில்சிங்கப்பூர் 13வது இடத்தில் உள்ளது.
அந்த ஆய்வு நிறுவனம் 120 நாடுகளில் உள்ள 207 நகரங்களில் வாழ்க்கைச் செலவினத்தை, ஆண்டுக்குஇரண்டு முறை ஆய்வு செய்து வருகிறது.
சிங்கப்பூரில் வீட்டு வாடகை, பெட்ரோல் விலை, மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் ஆகியவையும் விலைவாசியும்கடந்த 12 மாதங்களில் கணிசமாகக் கூடியுள்ளன.
ஆனாலும் 2021 ஆம் ஆண்டைப் போலவே சிங்கப்பூர் 2022ஆம் ஆண்டிலும் ஆய்வில் 13 வது இடத்தில்உள்ளது.
சிங்கப்பூரின் நாணயமான வெள்ளி வலு இழந்து உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட போது சிங்கப்பூரின் உற்பத்தித்துறையும் ஏற்றுமதியும் குறைந்திருந்தது.
அதனால்தான், பணவீக்கம் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவின் அதிகாரத்துவ நாணயம், அமெரிக்கடாலர் போன்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் வெள்ளி வலுவிழந்துவிட்டது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், அன்றாடசெலவீனங்களை செய்யவே வருமானம் சரியாக இருப்பதாகவும், அதில் மிச்சப்படுத்தி சொந்த ஊருக்கு பணம்அனுப்புவது பெரும் சவாலாக இருப்பதாக கூறினர்.