
வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவல் ஓர் முக்கிய காரணமாகும்..!
சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவலால் ஏற்பட்ட தாமதமும் ஒரு முக்கியக் காரணம் என்று ஊழியர்களும் நிறுவன நிர்வாகிகளும் கூறுகின்றனர்.

வேலை தேங்கி நின்றதால் அதை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்புச் சோதனைகளை அதிகரிக்க மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அது நிச்சயம் விபத்துகளைக் குறைக்க உதவும் என்று கட்டுமானத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
வேலையிட விபத்தைத் தவிர்க்க அனைவரும் முயற்சி எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாண்டில் இதுவரை 27 பேர் வேலையிட விபத்தில் மாண்டனர்.
பெரும்பகுதி விபத்து கட்டுமானத் துறையில் நடந்திருக்கிறது