17 பேர் காயமடைந்த விபத்து புக்கிட் திமா விரைவுச்சாலையில் 6 வாகனங்கள் மோதல்!

0

வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) காலை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே புக்கிட் திமா விரைவுச்சாலையில் தொடராக மோதியதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலை பஸ், லாரிகள், மற்றும் கார்கள் உட்பட ஆறு வாகனங்கள் மோதியதால் பெருமளவிலான சேதம் ஏற்பட்டது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக காலை 8 மணியளவில் விபத்து நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

காயமடைந்தவர்களில் 36 முதல் 43 வயதுடைய மூன்று லொறி ஓட்டுநர்கள், 22 முதல் 49 வயதுடைய 13 லொறி பயணிகள் மற்றும் 63 வயதான கார் சாரதி அடங்குவர். காயமடைந்த ஒன்பது பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மீதமுள்ள எட்டு பேர் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தின்போது வாகனங்களில் இருந்து பொருட்கள் சாலையில் சிதறியது. தொழிற்சாலை பஸ்சின் முன் கண்ணாடி நொறுங்கியதுடன், லாரி மற்றும் கார்களும் கடுமையாக சேதமடைந்தன. போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.