மேல் சாங்கி சாலையில்SAF இராணுவ வாகனமும் வேனும் மோதல் 24 வயது ராணுவ வீரர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்!

0

ஜூன் 10 ஆம் தேதி காலை, மேல் சாங்கி சாலை கிழக்குப் பகுதியில் ஒரு SAF (சிங்கப்பூர் ஆயுதப்படைகள்) வாகனமும் ஒரு சாம்பல் நிற வேனும் விபத்தில் சிக்கின. விபத்துக்குப் பிறகு SAF ஓட்டுநர், 24 வயது ராணுவ வீரர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த வழியாகச் சென்ற வாகனத்தின் டேஷ்கேமில், SAF டிரக் நடுப் பாதையில் ஒரு வேனுடன் நின்றதைக் காட்டியது, அந்த இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ், ஒரு போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள் அதிகாரி காணப்பட்டார்.

விபத்து குறித்து காலை 7 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர், மேலும் அதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

காயமடைந்த ராணுவ வீரர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஆரம்பகட்ட சிகிச்சையின் பின்
வீடு திரும்பினார். அமைச்சகம் தற்போது விசாரணைக்கு உதவி செய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.