சோவா சூ காங்கில் சாலை விபத்து 84வயது முதியவர் உயிரிழப்பு, ஓட்டுநர் கைது!
சிங்கப்பூர் – மே 26 அன்று அதிகாலையில் ஒரு துயர விபத்து நிகழ்ந்தது. சோவா சூ காங்கில் உள்ள ஒரு சாலை சந்திப்பில் 84 வயது முதியவர் மினிபஸ் மோதி உயிரிழந்தார்.
சோவா சூ காங் அவென்யூ 1 மற்றும் சோவா சூ காங் சென்ட்ரல் சந்திப்பில் காலை 6:15 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 53 வயது மினிபஸ் ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், விபத்து நடந்த இடத்தில் நீல நிற போலீஸ் கூடாரம் இருப்பதையும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் இருப்பதையும் காட்டுகிறது.
விபத்து குறித்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.