மெக்பெர்சன் சாலை மற்றும் அல்ஜூனிட் சாலை சந்திப்பில் இரு கார்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்!
சிங்கப்பூரின் மெக்பர்சன் சாலை மற்றும் அல்ஜூனிட் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:10 மணிக்கு இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய நீல நிற காரின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. சாலையில் சிதறிய கார் பாகங்கள் காட்சியளித்தன. மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின் பெட்டியில் மோதி விழுந்ததாக ஷின் மின் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
29 வயது ஓட்டுநரும், உடன் வந்த நான்கு பயணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வயது முதல் 27 வயது வரையிலான காயமடைந்தவர்கள் அனைவரும் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது சுயநினைவில் இருந்தனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
image tamil murasu