சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டு சிறைத் தண்டனை..!

0

சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டுசிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், வசந்தபுரியைச் சேர்ந்தவர் சோலை கணேசனுக்கும் சிங்கப்பூர்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியமேரியிற்கும் இடையே முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஆரோக்கியமேரியைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக, கடந்த 2020- ஆம் ஆண்டு  சோலைகணேசன் சிங்கப்பூர் வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இருவரும் சிங்கப்பூரில் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சோலை கணேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணமானது குறித்த விவரம், ஆரோக்கியமேரிக்கு தெரிய வந்தது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியமேரி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சோலைகணேசன் மீது புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், சோலை கணேசன் மற்றும் அவரது தாயார், சகோதரி, சகோதரர் உள்ளிட்டோர் மீதுவழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பான, வழக்கும் புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்குதொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என்று நீதிபதி சத்யா 14/06/2022 அன்று  தீர்ப்பளித்தார். அத்துடன், அவர்களுக்கான தண்டனைகளையும் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.