சுவர் விழுந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்…!

0

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) சிராங்கூன் கார்டன்ஸ் (Serangoon Gardens) பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் ஊழியர் ஒருவர் உடைத்துக் கொண்டிருந்தசுவரின் ஒருபகுதி அவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் 41 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் அன்று மாலை சுமார் 4.30 மணிக்குத் தகவல்பெற்றதாக மனிதவள அமைச்சு  கூறியது.

தனியார் தரை வீட்டில் சுவரை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் ஒருபகுதிஅவர் மீது விழுந்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப்பட்டது என்று அமைச்சின்பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் Beow Hock Engineering நிறுவனம் கட்டுமானப் பணிகளைமேற்கொண்டிருந்தது. சம்பவம் குறித்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

அங்கு அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு Beow Hock Engineering நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடிபாடு பணிகள் முறையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்று அமைச்சு சொன்னது. அது இந்த ஆண்டு சிங்கப்பூரில் நேர்ந்த 26ஆவது வேலையிட மரணம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.