பள்ளி பேருந்து விபத்து புக்கிட் திமா பகுதியில் சோகம்!
ராயல் கிரீன் குடியிருப்புக்கு வெளியே இன்று காலை ஒரு பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இணையத்தில் பகிரப்பட்டுள்ள காணொளிகளில், பேருந்தின் முன் சக்கரங்கள் பெயர்ந்து, மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
அருகில் கார் ஒன்றும் தீப்பிடித்து எரிகிறது. சாலையில் பள்ளிப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன, அவசர உதவிப் பணியாளர்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை, சிங்கப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் (SCDF), போக்குவரத்து காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். புக்கிட் திமா சாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன. ஒரு மின் கம்பம் விழுந்திருந்ததால் போக்குவரத்து பாதைகள் குறைக்கப்பட்டிருந்தன.
Singapore Work Permitக்கான தகுதிகள் மற்றும் அடிப்படை சம்பளம் பற்றி தெரியுமா?
விபத்து காரணமாக புக்கிட் திமா சாலையில் பேருந்து சேவைகள் தாமதமடைந்தன. சம்பவ இடம் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பாதசாரிகளின் நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமீபத்தில் சிறுவர்கள் தொடர்புடைய விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மேலும் வாசிக்க…