ஏப்ரல் 2024 முதல் அரசு நிதியுதவி பெறும் கட்டுமானப் பணிகளில் கடுமையான விதிமுறைகள்!ஊழியர்கள் மகிழ்ச்சி.
கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக இந்தப் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், பாதுகாப்பான செயல்முறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெறுவதைத் தடுக்க முடியும்.
இத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்கள் கூட இந்த பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் அரசாங்கத் திட்டங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் பணிகளில் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தனியார் நிறுவனங்களும் இந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.