சிங்கப்பூரின் அதிரடி முன்னேற்றம் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் பட்டியலில் ஆறாவது இடம்!
சேவில்ஸ் ‘தாங்குதிறன் மிக்க நகரங்கள்’ குறியீட்டில், சிங்கப்பூர் கிடுகிடுவென ஆறு இடங்கள் உயர்ந்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது! கடந்த 2021-ல் பன்னிரண்டாவது இடத்தில் இருந்த நம் சிங்கை நகரத்திற்கு இது ஒரு பெரிய சாதனை.
ஏராளமானோர் இங்கு வந்து குடியேறுவதும் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்ததும்தான் இந்த மகத்தான முன்னேற்றத்திற்கு காரணம்.
சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் சவால்களைத் தாண்டியும் சிங்கப்பூரின் முதலீடுகள் சீராக உள்ளன.
தொழில்நுட்பத்தில் சிங்கப்பூரின் போட்டித்தன்மை அதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தொடக்க நிறுவனங்களுக்கான முதலீடுகள் கடந்த வருடம் அமெரிக்க $8.2 பில்லியனாக இருந்தது, இப்போது அசத்தலாக $9.4 பில்லியனாக உயர்ந்துவிட்டது!
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக மாற்றங்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என எது வந்தாலும், தன் மக்களின் நலனை முதன்மையாக வைக்கும் நகரமே உண்மையிலேயே தாங்கும் திறன் கொண்டது என்கிறது சேவில்ஸ் நிறுவனம்.
இந்தப் பட்டியலில் தொடர்ந்து நியூயார்க் முதலிடத்திலும், டோக்கியோ, லண்டன் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
சியோல் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸும் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளன.
உலக அரங்கில் பல பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், பயணம், குடிபெயர்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் இந்த பட்டியல் சிறப்பாக உள்ளது.
நல்ல நிர்வாகமும் உறுதியான திட்டமிடல்களும் கொண்ட நகரங்களே முன்னணியில் உள்ளன என்பது மீண்டும் நிரூபணமாகிறது.