நோய்த் தொற்றால் இருவர் உயிரிழப்பு..!
சிங்கப்பூரில் புதிதாய் 12,784 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 12,248 மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 536
நோய்த்தொற்றால் மேலும் இருவர் மாண்டனர். நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,421 ஆனது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: 683. அத்துடன் உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை: 77. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை: 16
வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 1.34 வாராந்திர நோய்த்தொற்று உயர்வு விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய ஒரு வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
சென்ற மாதம் 14ஆம் தேதியிலிருந்து விகிதம் ஒன்றுக்கும் அதிகமாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் இதுவரை 1,485,964 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களில் 96 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 78 விழுக்காட்டினருக்கு booster எனும் கூடுதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.