வேகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கவனம்: சிவப்பு விளக்கு கேமராக்கள் இனி வேகத்தையும் அளவிடும்!

0

கடந்த மூன்று வாரங்களில் மட்டும், சிவப்பு விளக்கு சமிஞ்சைகளை மீறுவதோடு, வேகக்கட்டுப்பாட்டையும் மீறிய 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் சிக்கியுள்ளன.

இந்த 2023 ஆம் ஆண்டில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் வில்லியம் ஃபூ அவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பொதுவாக, சிவப்பு விளக்குகளை மீறும் வாகனங்களை மட்டும் பிடிக்க உதவும் இந்தக் கேமராக்கள், தற்போது ஒரு மின்காந்த புலத்தை உருவாக்கி வாகனங்களின் வேகத்தையும் கண்காணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திறன்களை விரிவாக்குவதன் மூலம், விபத்து அதிகம் நிகழும் சாலைகளில் கண்காணிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேமரா நிறுவப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வேக வரம்புகள் குறித்த எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படும்.

மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் உரிமத்தில் குறைப்பு புள்ளிகள் முதல், உரிமத்தை இரத்து செய்தல் அல்லது சிறைத்தண்டனை வரை பல்வேறு தண்டனைகள் வழங்கப்படும்.

இது மீறலின் தீவிரத்தைப் பொறுத்தது. சிவப்பு விளக்கு கேமராக்களால் கண்டறியப்படும் மீறல்களின் எண்ணிக்கை 2023-ல் குறைந்தாலும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களின் பயனை எடுத்துக்காட்டுகிறது.

போக்குவரத்து விதிகளை மதிக்கும் வகையில், விபத்து அதிகம் நிகழும் சாலைகளை வாகன ஓட்டிகளுக்கு மாதந்தோறும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.