சிங்கப்பூரில் தொழிலாளர்கள் Skilled test பெறுதல் மற்றும் அதன் அவசியம்.

0

சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றன. இன்னும் அதிகமான நபர்கள் வேலைக்கு வருகின்றனர். தொழிலாளர்கள் முதல் பெரிய அலுவலர்கள் வரை ஏராளமான மக்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.

அப்படி வருபவர்கள் வெவ்வேறு விதமான கல்வி பின்புலத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதற்க்கு தகுந்தவாறு வேலைகளுக்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பிக்கப்படும் வேலைகளுக்கு பல்வேறு விதமான ஆவணங்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் அவசியம்.

அதில் முக்கியமான ஒரு சான்றிதழ் தான் Skilled test சிங்கப்பூருக்கு கட்டிட வேலை மற்றும் கப்பல் வேலை போன்றவற்றிற்கு வரும் தொழிலாளர்களுக்கு இந்த test கட்டாயம் தேவை!

எந்தெந்த வேலைகளுக்கெல்லாம் இந்த test அவசியம்?

கட்டுமானம் சார்ந்த தொழில்
கப்பல் பணி
பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள்

முதலில் கட்டிட வேலைகளில்பணிபுரிவோருக்கு welding, carpending, Plumbing மற்றும் Electrical போன்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் ஏராளமான பயிற்சிகள் உள்ளன. அந்தந்த பிரிவுகளில் தேர்ந்தவராக இருக்க குறிப்பிட்ட வருட அனுபவம் மற்றும் இந்த Skilled Test சான்றிதழ் போன்றவை அவசியம்.

கப்பல் பணிகளில் welding, Electrical, Maintenance போன்ற பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

PCM permit Marine permit மற்றும் Shipyard Permit டெஸ்ட் அடிக்க முடியும் ஆனால் கம்பெனி லெட்டர் அவசியம் ஒரு சில கம்பெனிகள் தான் லெட்டர் கொடுக்கின்றனர்.

ஆனால் constructionதுறையில் இருப்பவர்கள் Spass மற்றும் Epassல் இருப்பவர்கள் டெஸ்ட் அடிக்காமல் இருந்தால் டெஸ்ட் அடிக்க கம்பெனி லெட்டர் தேவையில்லை டெஸ்ட் அடிக்க முடியும்.ஏஜென்ட் மூலமாக பணத்தைக் கட்டி வருபவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.