யிஷுனில் வாகன விபத்து 31 வயது பெண் காயம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்!
நவம்பர் 27 அன்று யிஷுனில் நடந்த வாகன விபத்தில் 31 வயது பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். யிஷூன் அவென்யூ 2 மற்றும் அவென்யூ 7 சந்தியில் காலை 8:45 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற கார் சந்தி வழியாக நேராக ஓட்டிச் செல்வதைக் காட்டுகிறது. வெளிர் நிற கார் கருப்பு நிற காருடன் மோதிய பின், கருப்பு நிற கார் சறுக்கி கவிழ்ந்தது.
கருப்பு நிற காரை ஓட்டி வந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.