MCEயில் லாறி மோதிய விபத்தில் 57 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!
டிசம்பர் 2 அன்று மெரினா கோஸ்டல் எக்ஸ்பிரஸ்வேயில் (MCE) லாறி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த
57 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேக்ஸ்வெல் சாலையில் வெளியேறும் பகுதிக்கு அருகில் மதியம் 1 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
காயப்பட்ட நபர் சுயநினைவின்றி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லாறி சாரதியான 35 வயதுடைய ஆண், பொலிஸ் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
பொலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.