பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் 6 வாகன விபத்து மூவர் காயம்!
டிசம்பர் 12 அன்று துவாஸ் நோக்கிச் செல்லும் பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (PIE) பல வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஜலான் பஹார் வெளியேறும் இடத்திற்கு அருகே மதியம் 2:05 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று கார்கள், ஒரு மினிபஸ், ஒரு மோட்டார் சைக்கிள்மற்றும் லாரி என் பனவாகும்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) அதிகாரிகள் அந்த நபரைக் காப்பாற்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், 26 முதல் 49 வயதுடையவர்கள், ஒரு கார் சாரதி, ஒரு மினிபஸ் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.
காயப்பட்டவர்கள் மூவரையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோ, விபத்து நடந்த இடத்தைக் காட்டியது, அவசர வாகனங்கள், ஒரு எமாஸ் மீட்பு டிரக் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
Image Singapore road accident Facebook