சிங்கப்பூர் சாலை விபத்து பெண் பலி, வாலிபருக்கு படுகாயம்!

0

சிங்கப்பூர்: டிசம்பர் 25 அன்று அப்பர் சிராங்கூன் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 56 வயது பெண் ஒருவர் இறந்தார். இந்த விபத்து நள்ளிரவு 12.20 மணியளவில் நடந்தது.

அப்பர் செராங்கூன் சாலையில் நள்ளிரவு 12.20 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

குறித்த பெண் மற்றும் 19 வயதான மோட்டார் சைக்கிளில் பயணித்த பயணியும் இருவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். பெண் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Images Singapore roads accident.com

Leave A Reply

Your email address will not be published.