CNB நடத்திய அதிரடி சோதனை ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல்!
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (CNB) நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 80 பேரை கைது செய்துள்ளனர்.
ஏராளமான சட்டவிரோத போதைப் பொருட்களையும் கண்டுபிடித்தனர். பிடிபட்டவர்களுள் 14வயது சிறுமியும் அடங்கும்.
திங்கள்கிழமை (10ஆம் தேதி) தொடங்கிய இந்த நடவடிக்கை (14ஆம் தேதி) முடிவடைந்ததாக சிஎன்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பகிர்ந்துள்ளது.
சோதனையின் போது, ஹெராயின் (கிட்டத்தட்ட 1 கிலோ), மெத்தம்பெட்டமைன் (400 கிராமுக்கு மேல்), கஞ்சா (82 கிராம்), கெட்டமைன் (6 கிராம்), மற்றும் 200க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மற்றும் எரிமின்-5 மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.