சிங்கப்பூரில் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம் இதோ..!

0

சிங்கப்பூரில் வேலை செய்ய வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு வகையான பாஸ் மற்றும் பெர்மிட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்களின் அனுபவம், திறமை மற்றும் அவர்கள் வைத்திருக்கும் பாஸ் வகையைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் அனுபவம் மற்றும் திறமை அதிகரிக்கும் போது, அவர்களின் சம்பளமும் அதிகரிக்கும்.

சிங்கப்பூரில் வேலை செய்ய EPass, S Pass, NTS Permit, Shipyard Permit, PCM Permit, EntrePass, Work Permit, ONE Pass போன்ற பல்வேறு பாஸ்கள் மற்றும் பெர்மிட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தொழிலாளர்களின் திறமை, கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

S Pass இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: Financial Services Sector மற்றும் General Sector. Financial Services Sector இல் மாதாந்த அடிப்படை சம்பளம் SGD 3,750 ஆகவும், General Sector இல் SGD 3,250 ஆகவும் வழங்கப்படுகிறது.

EPass இல் கூட Financial Services Sector மற்றும் General Sector என இரண்டு பிரிவுகள் உள்ளன. Financial Services Sector இல் மாதாந்திர சம்பளம் SGD 5,500 ஆகவும், General Sector இல் SGD 5,000 ஆகவும் வழங்கப்படுகிறது.

NTS Permit வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் SGD 2,100 ஆக வழங்கப்படுகிறது. S Pass Quota கிடைக்காத தொழிலாளர்கள் பெரும்பாலும் NTS Permit மூலம் சிங்கப்பூருக்கு வருகிறார்கள்.

Shipyard Permit வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு SGD 1,300 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஓவர் டைம் சம்பளமும் உள்ளடங்கும், இது ஓவர் டைம் வேலை அடிப்படையில் அதிகரிக்கும்.

கட்டுமானத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு Skill Test அடிப்படையில் SGD 1000 முதல் SGD 1,500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அனுபவம் அதிகமானவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. PCM மற்றும் Process துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு SGD 700 முதல் SGD 1,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

PCM, Shipyard, மற்றும் Work Permit தொழிலாளர்களுக்கு நாள் அல்லது மாத அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது, இது நிறுவனங்களின் கொள்கைகளைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலான வேலைகளில் ஓவர் டைம் வழங்கப்படுகிறது, இதன் மூலம் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்க முடியும்.

சிங்கப்பூரில் செலவுகள் அதிகரித்துள்ளதால், செலவுகள் மற்றும் சம்பளத்தை கருத்தில் கொண்டு பொருத்தமான வேலை தேர்வு செய்வது முக்கியம்.

Leave A Reply

Your email address will not be published.