சிங்கப்பூரில் Work Permit அல்லது S Pass உங்கள் வேலை வாய்ப்புகளுக்கு சரியான தேர்வு எது?
Work Permit மற்றும் S Pass இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம். சிங்கப்பூரில் Work Permit மூலம் வந்தால் நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்ய முடியாது, அதேபோல் S Pass மூலம் வந்தால் என்ன செய்யலாம், என்ன செய்ய முடியாது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
எனவே, ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு, என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று தெரியாமல் திண்டாடும் நண்பர்களுக்கு
Work Permit மற்றும் S Pass இடையே உள்ள வித்தியாசம்
- Work Permit
Work Permit என்பது தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தது. இது குறைந்த ஊதியத்துடன் தொடங்குகிறது. சம்பளம் பொதுவாக $800 முதல் $1000 வரை இருக்கும். சில இடங்களில் $1200 அல்லது $1500 வரை கூட கிடைக்கும்.
Work Permit உள்ளவர்கள் PR (நிரந்தர வதிவிடத்திற்கு) க்கு விண்ணப்பிக்க முடியாது. PR க்கு விண்ணப்பிக்க, நீங்கள் S Pass அல்லது E Pass க்கு மாற்றம் செய்ய வேண்டும்.
Work Permit உள்ளவர்கள் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் திருமணம் செய்து கொண்டாலும் PR கிடைக்காது.
Work Permit உள்ளவர்கள் studyக்கு மாற்றம் செய்ய முடியாது. நீங்கள் Work Permit உடன் வந்தால், அதை studyக்கு மாற்ற முடியாது.
Work Permit உள்ளவர்கள் சிங்கப்பூரில் இருந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
ஆனால் சில நிறுவனங்கள் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யலாம், இதனால் தொழிலாளர்கள் ஓடிப்போக முடியாது.
இதற்கு மிகக் குறைந்த கல்வித் தகுதி போதுமானது. வயது வரம்பு மலேசியர்களுக்கு 18-58 ஆகவும், பிற நாடுகளுக்காக 18-50 ஆகவும் இருக்கும். இதில் குறைந்தபட்ச சம்பளத்தை கொண்டது. இது கட்டிட தொழில், உற்பத்தி, கடல்சார், சேவைகள், விவசாயம் போன்ற துறைகளில் வழங்கப்படுகிறது. முதலில் 2 ஆண்டுகள் வழங்கப்படும், பின்னர் புதுப்பிக்கலாம்.
2.S Pass
இதற்கு குறைந்தபட்சம் Diploma அல்லது Degree தேவை. வயது வரம்பு பொதுவாக 18-50. குறைந்தபட்ச சம்பளம் $3,150 (கட்டிடத் துறைக்கு $3,650). இது IT, Engineering, Healthcare, Finance, Services போன்ற துறைகளில் வழங்கப்படுகிறது. முதலில் 1-2 ஆண்டுகள் வழங்கப்படும், பின்னர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை புதுப்பிக்கலாம்.
S Pass உள்ளவர்கள் PR க்கு விண்ணப்பிக்கலாம். PR க்கு விண்ணப்பிக்க, நீங்கள் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் வேண்டும், மேலும் சிங்கப்பூர் அர சாங்கத்திற்கு தன்னார்வலர் பணிகளில் ஈடுபட வேண்டும்.
S Pass உள்ளவர்கள் படிப்புக்கு மாற்றம் செய்யலாம். உதாரணமாக, நீங்கள் S Pass உடன் இருந்தால், பகுதி நேர படிப்புகளை முடிக்கலாம்.
S Pass உள்ளவர்கள் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொள்ளலாம். நீங்கள் சிங்கப்பூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், PR க்கு விண்ணப்பிக்கலாம்.
S Pass உள்ளவர்கள் சிங்கப்பூரில் வாடகை வீடு எடுக்கலாம். நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடலாம்.
S Pass உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை சிங்கப்பூருக்கு அழைத்து வரலாம். உங்கள் சம்பளம் $6000 க்கு மேல் இருந்தால், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வரலாம்.
Work Permit மற்றும் S Pass இடையே உள்ள வித்தியாசத்தை நான் உங்களுக்கு. பயனுள்ளதாக அமையும் .
நீங்கள் எந்த தொழில் துறையைச் சேர்ந்தவரோ அதைப் பொறுத்து சரியான விசாவை தேர்வு செய்யலாம். மேலும், உங்கள் வேலையாளரும் (employer) வேலைவாய்ப்புக்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும்.
குறைந்த திறன் தொழிலாளர்களுக்கு Work Permit நடுத்தர திறன் தொழிலாளர்களுக்கு S Pass பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, சிறந்த சம்பளம், குடும்பத்தாரை அழைத்துவருதல், வேலையை மாற்றுதல் போன்றவை. தொழில்துறையைக் கருத்தில் கொண்டு சரியான அனுமதிப்பத்திரத்தை தேர்வு செய்ய வேண்டும்.