நிகோல் நெடுஞ்சாலையில் கார் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

0

சிங்கப்பூர் நிகோல் நெடுஞ்சாலையில் ஸ்போர்ட்ஸ் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Porsche காரான அந்த கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதிலிருந்து அடர்ந்த புகை கிளம்பியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மதியம் 2.10 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. கார் நிகோல் நெடுஞ்சாலையில், கல்லாங்-பயா லெபார் விரைவுச்சாலைக்கு அருகில் உள்ள குயில்மார்ட் சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, எரிந்த காருக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபரைத் தவிர மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்ற ஐந்து பேர் மருத்துவமனைக்கு செல்லவில்லை.

இறந்தவர் கார் ஒன்றை ஓட்டிச் சென்றவர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்
மேலதிக விசாரணைகளிடம் விட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.