சிங்கப்பூரின் வேலை அனுமதி விதிமுறைகள் மாற்றம்!

0

சிங்கப்பூர் தனது வேலை அனுமதி (Work Permit) கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது.

ஜூலை 1, 2024 முதல், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், மியான்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக காலம் வேலை செய்ய முடியாமல் இருந்த கட்டுப்பாடு நீக்கப்படும்.

இதனால், நிறுவனங்கள் அனுபவமிக்க ஊழியர்களை நீண்ட காலம் தக்கவைத்து கொள்ள முடியும். ஆனால், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு இந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்படவில்லை.

மேலும், வேலை அனுமதி அட்டை (Work Permit) வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யும் வயது வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச வேலை செய்யும் வயது 60 இலிருந்து 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்களின் வயது வரம்பும் 61 ஆக உயர்த்தப்படுகிறது. இது, உள்ளூர் ஓய்வு வயதுக்கு ஏற்ப மாற்றப்பட்டது.

2025 ஜூன் 1 முதல், பூட்டான், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் தொழிலாளர்களுக்கான அனுமதி பட்டியலில் சேர்க்கப்படும். 2025 செப்டம்பர் 1 முதல் சமையற்காரர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், உற்பத்தி துறைக்கான பொறியாளர்கள் ஆகிய துறைகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், திறமையான ஊழியர்களை ஈர்க்கவும், தொழில்துறைக்கு தேவையான பணியாளர்கள் கிடைக்கவும் செய்யப்படும்.

S-Pass மற்றும் வேலை அனுமதிச் சீட்டுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. S-Pass ஊழியர்களுக்கு 2025 செப்டம்பர் 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் $3,150 இலிருந்து $3,300 ஆக உயர்த்தப்படும். 45 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இது மேலும் அதிகரிக்கும்.

நிதிச் சேவைகள் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது $3,800 ஆக இருக்கும். இந்த மாற்றங்கள் சிங்கப்பூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் மற்றும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கவும் செய்யும்.

Leave A Reply

Your email address will not be published.