சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்களை வார்த்தைகளால் திட்டியதாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதற்கும்57 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு!
57 வயது பிரிட்டிஷ்சை சேர்ந்த ஆடவர் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்களை வார்த்தைகளால் திட்டியதாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதற்கும் குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் நீதிமன்றத்திடம் இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இந்த மாதம் 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
இந்த மனிதரின் பெயர் பர்ரிட்ஜ் ரிச்சர்ட் மைக்கேல் ரோல். அவர் இரண்டு தவறான செயல்களை செய்துள்ளார்.
முதலில், 7 ஆம் தேதி இரவு தாமதமாக விமான நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண்மணியை வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டாவதாக, விமானத்திற்கு செல்லும் நடைபாதையில் ஒரு சுவரை உதைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில் இந்த மனிதர் லண்டனுக்கு செல்லும் விமானத்தில் ஏறிய பிறகு தனது மொபைல் போனை தொலைத்துவிட்டதை உணர்ந்தார். அதை தேடுவதற்காக விமானத்திலிருந்து இறங்கினார்.
ஆனால் ஊழியர்கள் அவரிடம், விமானம் புறப்படும் நேரம் ஆகிவிட்டதால் திரும்ப வராவிட்டால் அவர் விமானத்தில் பயணிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதைக் கேட்ட அவர் கோபம் அடைந்து, ஊழியர்களை. திட்டியதோடு சுவரை உதைத்தார்.
இதன் விளைவாக, அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த குற்றங்களுக்காக அவர் தண்டனை பெற்றால், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.