சிங்கப்பூரில் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ளகடைகளில் $5,136 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு இந்திய ஆடவர் கைது!

0

இந்தியாவைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், சிங்கப்பூரில் உள்ள ஜுவல் சாங்கி விமான நிலையம் மற்றும் மற்ற டெர்மினல்களில் உள்ள 14 கடைகளில் இருந்து சுமார் S\$5,136 மதிப்புள்ள பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறார்.

திருட்டுக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு சென்றுவிட்டார். ஆனால் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டார். ஜூன் 1ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியபோது, விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பைகளில் பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மே 29 அன்று, ஜுவலில் உள்ள ஒரு கடையில் இருந்து பை காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அப்போது கடை கண்காணிப்பு கேமராவில் அந்த நபர் பணம் செலுத்தாமல் பையை எடுத்துச் செல்வது பதிவாக இருந்தது. விசாரணையின் போது, அவர் ஏற்கனவே சிங்கப்பூரை விட்டு சென்றிருந்தது தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து பல அழகு சாதனங்கள், புகை திரவியங்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. அவர்மீது 13 திருட்டு வழக்குகள் மற்றும் திருடிய பொருட்கள் வைத்திருந்ததற்கான கூடுதல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.