BKE-விரைவுச்சாலையில் லாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0

சிங்கப்பூர் – ஜூலை 25, வியாழக்கிழமை அதிகாலை, புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) பான் ஐலண்ட் விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, லாரி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் காலை சுமார் 6.50 மணியளவில் செலட்டர் விரைவுச்சாலை (SLE) வெளியேறும் இடத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

முகநூலில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த லாரிக்கு அருகில் காவல் துறை கூடாரம் ஒன்று போடப்பட்டிருப்பதும், அங்கே ரத்தக் கறைகளும் உடைந்த பொருட்களும் சிதறிக் கிடப்பதும் காணப்பட்டது.

சம்பவ இடத்தில் பல காவல்துறை அதிகாரிகள், அவசரகால வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவையும் காணப்பட்டன. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞர் அங்கேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவருடன் பின்னால் அமர்ந்திருந்த அதே 23 வயதுடைய மற்றொரு இளைஞர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு (Khoo Teck Puat Hospital) கொண்டு செல்லப்பட்டார்.

விபத்திற்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், 39 வயதுடைய லாரி ஓட்டுநர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.