CTE சுரங்கப்பாதை S$1.4 மில்லியன் சேதத்தை ஏற்படுத்தியதற்காக 55 வயதான லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டடு!

0

சிங்கப்பூரில் 55 வயதுடைய சீன வம்சாவளியையுடைய லாய் டாவோஹோங் என்பவர், லாரியில் இருந்த கிரேன் பகுதியை மடக்காமல் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே (CTE) சுரங்க பாதையில் செலுத்தியதால், சுமார் 14 லட்சம் சிங்கப்பூர் டாலர் (அல்லது \$1.4 மில்லியன்) மதிப்புள்ள பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2024 நவம்பர் 8ஆம் தேதி, கெய்ர்ன்ஹில் சாலையில் இருந்து CTE சுரங்கப்பாதைக்குள் அவர் நுழைந்தபோது நடந்தது. கிரேன் உயர்த்தப்பட்ட நிலையில் இருந்ததால், லாரி உயர எல்லை தடையை, மர கிளைகளை, பின்னர் சுரங்கத்தின் மேற்பகுதியை மோதி சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 மணி நேரம் சாலை மூடப்பட்டிருந்தது.

போலீசார் கூறுகையில், இது லாய் செய்த முதல் தவறு அல்ல. இதற்கு முன்பும் இதே மாதிரியான தவறை செய்துள்ளார். இப்போது அவருக்கு இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

  1. கனரக வாகனம் மூலம் அரச சொத்துக்களுக்கு (பொதுக் கட்டமைப்புகள்) சேதம் விளைவித்தது
  2. 4.5 மீட்டரை மீறிய உயரமுள்ள வாகனத்தை காவல் துறையின் அனுமதியின்றி இயக்கியது

இந்த விபத்து சம்பந்தமாக எடுத்த வீடியோவில், லாரி முதலில் மரக் கிளைகள், பின்னர் உயரத்தைக் கட்டுப்படுத்தும் தடையையும், பிறகு சுரங்கத்தின் வாயிலை மோதி நின்றதும் தெளிவாகக் காணப்படுகிறது. பின்னர் சுரங்கத்தின் மேலிருந்து பல மின்கம்பிகள் தொங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், லாய்க்கு கடுமையான தண்டனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கட்டடங்கள் அல்லது கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தால், முதல் முறைக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது \$5,000 அபராதம், மீண்டும் செய்தால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் \$10,000 அபராதம் வரை விதிக்கப்படும். மேலும், அளவுக்கு அதிகமான உயரமுள்ள வாகனங்களை போலீஸ் அனுமதியின்றி ஓட்டினால் கூட கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

இது போல மீண்டும் தவறிழைக்கும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

Leave A Reply

Your email address will not be published.