மார்சிலிங் HDB பிளாட்டில் தீ விபத்து, மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

0

ஜூலை 30 ஆம் தேதி மாலை, மார்சிலிங் சாலையில் உள்ள பிளாக் 4-இன் 13-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தால் வீட்டின் வரவேற்பறையும் படுக்கையறையும் சேதமடைந்தன. வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட தீயணைப்பு வீரர்கள், உடனடியாக நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் புகை மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த மின்சார சைக்கிளின் (Power-Assisted Bicycle) பேட்டரியிலிருந்துதான் தீ பரவியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேட்டரிகளை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைத் தவிர்க்குமாறும், மலிவான மற்றும் தரம் குறைந்த பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தோ பாயோவில் நடந்த தீ விபத்தில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் அடுத்த நாளே இந்த மார்சிலிங் தீ விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.