ஆகஸ்ட் 28 இரவு ஒரே குலுக்கலில் வாழ்க்கையே மாறும் S$10 மில்லியன் பரிசு!

0

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, இரவு 9:30 மணிக்கு நடக்கவிருக்கும் டோட்டோ குலுக்கல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த முறை முதல் பரிசான ஜாக்பாட், சுமார் S$10 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்த மாபெரும் பரிசுக்குக் காரணம், ஆகஸ்ட் 18, 21, மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடந்த முந்தைய மூன்று குலுக்கல்களிலும் முதல் பரிசை வென்றவர்கள் யாரும் இல்லை. அதனால், பரிசுகள் சேர்ந்து இந்த பெரிய தொகையாக மாறியுள்ளன.

இந்த முறை நடக்கும் குலுக்கல் ஒரு சிறப்பு “காஸ்கேட் ட்ரா” ஆகும். தொடர்ந்து மூன்று குலுக்கல்களுக்கு முதல் பரிசு வென்றவர்கள் யாரும் இல்லாதபோது, இந்த சிறப்பு குலுக்கல் நடத்தப்படும். இதில், மொத்த ஜாக்பாட் தொகையும் கட்டாயம் வெற்றியாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.

இந்த வருடத்தில், டோட்டோ ஜாக்பாட் S$10 மில்லியன் தொகையை எட்டுவது இது ஒன்பதாவது முறையாகும்.

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க வாழ்த்துகள்!

Leave A Reply

Your email address will not be published.