AYE விரைவுச்சாலையில் விபத்து பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்!

0

ஆகஸ்ட் 28 அன்று அயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) தனியார் பேருந்துடன் மோதிய விபத்தில் 28 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். Teng Fongபொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து, துவாஸ் திசையை நோக்கிச் செல்லும் பெஞ்சுரு சாலை வெளியேறும் வழியின் அருகே மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தடம் மாறிச் சென்றபோது பேருந்தின் பின்புறத்தில் மோதியது பதிவாகியுள்ளது.

மோதிய வேகத்தில் அவர் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் விழுந்தார். ஆனால், அந்தப் பேருந்து நிற்காமல் தொடர்ந்து சென்றது.

இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.