ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், முதல் நாள் காணாமல் போனவர் என உறுதி!

0

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன், 11 வயதான முஹம்மது ஹைரில் பின் முஹம்மது எஃபெண்டிதான் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது.

ஆட்டிசம் குறைபாடு உடைய அச்சிறுவன், ஒரு நாள் முன்பு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இணையத்தில் பகிரப்பட்ட தகவல்களின்படி, ஹைரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் மரின் கிரசன்ட் புளோக் 29 அருகே கடைசியாகக் காணப்பட்டார். அவரைத் தேடும் பணி அடுத்த நாள் இரவு வரை நீடித்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு சுமார் 9:55 மணியளவில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்பகுதியில் அவரது உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதில் சதிச்செயல் எதுவும் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.