சிங்கப்பூர் சாய் சீ அவென்யூ பிளாக் 31ல் தீ விபத்து தீயணைப்பு வீரர் உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதி!
செப்டம்பர் 5ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், சாய் சீ அவென்யூவில் உள்ள புளோக் 31ல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் தீ பற்றியுள்ளது. , தீவிபத்து ஏற்பட்டபோது அந்த வீட்டில் யாரும் இல்லை.
தீவிபத்தால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட. நான்கு பேர்களில் இருவர் சாங்கி பொது மருத்துவமனையிலும் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் தீயணைப்பு வீரர் ஆவார்.
தீயணைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, பாதுகாப்பு நடவடிக்கையாக அந்தக் கட்டடத்தில் வசித்த சுமார் 50 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.