PIE விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்36 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
செப்டம்பர் 9ஆம் தேதி காலை பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE) நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் 36 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட இந்த விபத்து, காலை சுமார் 6.30 மணியளவில், புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் இணைப்புச் சாலையில் நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள், அந்த ஆடவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு ஓட்டுநரான 32 வயது ஆடவர், சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் Singapore Roads Accident.com இணையத்தில் பரவி வருகின்றன. சேதமடைந்த மோட்டார்சைக்கிள், சாலையில் சிதறிக் கிடந்த.
காவல்துறை விசாரணையைத் தொடர்ந்த நிலையில், உயிரிழந்தவரின் உடலை மறைப்பதற்காக சம்பவ இடத்தில் நீல நிறக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
Image Singapore Roads Accident.com