மார்ச் இல் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்
பல நபர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மார்ச் இல் தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து சிங்கப்பூர் வருவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில் உள்ளது.
Work, Tour, Study எனப் பல்வேறு காரணங்களுக்காக பல இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் வருகின்றனர். SPass, EPass, Tourist Visa, Student Visa, TWPகள் மற்றும் TEPகள் என பல்வேறு Pass உள்ளன. குடிவரவு அதிகாரிகள் உங்களது வருகைக்கான ஆவணங்களைக் கோருவார்கள்.
முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை கவனமாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சிங்கப்பூர் செல்வதற்கான காரணத்தின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்பட்ட விசாவைக் காட்டுங்கள்.
அன்மையில் சிங்கப்பூரில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. எனவே பிசிஆர் சோதனை குறித்து அச்சம் தேவையில்லை. எனவே முன்னேற்றத்திற்காக நீங்கள் எந்த சோதனையும் எடுக்க வேண்டியதில்லை.
அடுத்து சிங்கப்பூருக்கான வருகை அட்டை(arrival card) மற்றும் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். இது தேவையில்லை என்றாலும், சிங்கப்பூர் வருகை அட்டையை எடுத்துச் செல்வது நல்லது. டூரிஸ்ட் விசா உள்ள பயணிகள் வரும்போது Return டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
Work Permit, PCM, shipyard ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் அதற்குறிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்கவில்லையா? இந்த கம்பனிகளுக்கு Apply செய்து பாருங்கள்
போர்டிங் ஸ்லாட்டில் முன்பதிவு செய்ய வேண்டும். புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு இது பொருந்தும். விடுப்பில் சிங்கப்பூர் திரும்பும் ஊழியர்கள் தேவையில்லை. ஸ்லாட் முன்பதிவு செய்யப்பட்ட மையத்திற்குச் செல்லும்போது ஐபிஏ, ஆன் போர்டிங் ஸ்லாட் புக்கிங் மெயில், தடுப்பூசி சான்றிதழ், ஆகியவற்றை எடுத்துச் செல்வதும் அவசியம்.
தனிமைப்படுத்தல் காரணமாக, நீங்கள் கப்பலில் மூன்று நாட்கள் செலவிடுவீர்கள். சிங்கப்பூர் வேலைவாய்ப்புக்கு புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த அனைத்து ஆவணங்களின் அச்சு நகல்களையும் கையோடு வைத்திருங்கள்.