டம்பைன்ஸில் பேருந்து விபத்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!
செப்டம்பர் 29ஆம் தேதி காலையில் டம்பைன்ஸ் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
டம்பைன்ஸ் கான்கோர்ஸ் மற்றும் டம்பைன்ஸ் சென்ட்ரல் 8 சந்திப்பில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த 19 முதல் 75 வயது வரையிலான பயணிகள் அனைவரும், சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறையின் தகவல்படி, 44 வயதான பேருந்து ஓட்டுநரிடம் இந்த விபத்து குறித்து விசாரணை இடம் பெற்றது.
இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்திருப்பதையும், சாலையின் தடுப்புச் சுவர் பெயர்ந்து கிடப்பதையும் காண முடிகிறது.
இந்த விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்ததுடன், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறியுள்ளது.