கோவன் MRT அருகே பல வாகனங்கள் மோதிய விபத்து ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

0

சிங்கப்பூர்: அக்டோபர் 24 மதியம் கோவன் MRT நிலையம் அருகே நடந்த பல வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து மாலை சுமார் 4.30 மணியளவில் மேல் செராங்கூன் சாலையில் நடந்ததாக சிங்கப்பூர் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

29 முதல் 66 வயதுக்குட்பட்ட ஐந்து பேரை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் 48 மற்றும் 31 வயதுடைய இரண்டு ஓட்டுநர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் மருத்துவமனை சிகிச்சையை மறுத்தனர்.

சம்பவ இடத்தில் வாகனப் பாகங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. இடதுபுற பாதையில் Go-Ahead Singapore நிறுவன பேருந்து நின்றிருந்தது; அருகே ஒரு கருப்பு கார் முன்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்தது.

சம்பவ இடத்துக்கு SCDF இரண்டு தீயணைப்பு வாகனங்களையும் இரண்டு ஆம்புலன்ஸ்களையும் அனுப்பியது. துணை மருத்துவர்கள் பேருந்து ஓட்டுநர் உட்பட பலருக்கு இடத்திலேயே சிகிச்சை அளித்தனர்.

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். போலீஸ் விசாரணை தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.