பலத்த காற்றில் மரம் சாய்ந்தது SLE சாலையில் 2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயம்!

0

அக்டோபர் 24-ஆம் தேதி ராத்திரி, பயங்கர காற்றுடன் கனமழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், SLE விரைவுச்சாலையில் (Seletar Expressway) ஒரு மரம் திடீரெனச் சாலையில் சாய்ந்து விழுந்தது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பைக் ஓட்டியவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. லென்டோர் அவென்யூ வெளியேறும் வழிக்கு (Lentor Avenue exit) அருகே இரவு சுமார் 10:10 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது தொடர்பான ஒரு வீடியோவில், மூன்று பைக்கர்கள் அந்தச் சாலையில் சென்றுகொண்டிருப்பது தெரிகிறது. அப்போது, சாலையின் நடுப்பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.

ஒரு பைக்கர் மீது மரம் பட்டபோதும், அவர் கீழே விழாமல் வண்டியைச் சமாளித்துக்கொண்டார். மற்றொருவரோ, வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து ஈரமாக இருந்த சாலையில் பல மீட்டர் தூரம் சறுக்கிக்கொண்டே சென்றார்.

SCDF (சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை) மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த அந்த இரண்டு நபர்களையும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.