லிட்டில் இந்தியாவில் 13 மதுக் கடைகளுக்கு மீது காவல்துறை விசாரணை!

0

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள 13 மதுபானக் கடைகள் விதிகளை மீறியதாகக் கூறி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அக்டோபர் 5 முதல் 20 வரை நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. லிட்டில் இந்தியா என்பது மது விற்பனை மற்றும் குடிப்பழக்கம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் பகுதி என்பதால், இங்கு கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மது விற்க அனுமதிக்கப்படுகின்றன.

சில கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கடையை திறந்திருந்ததாகவும், சில கடைகள் உரிமம் இல்லாமல் மதுவை விற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு கடை தனது கடை இடத்தின் ஒரு பகுதியை மது அருந்தும் இடமாக மாற்றியிருந்தது, இது சட்டத்திற்குப் புறம்பானது.

மதுவை உரிமம் இல்லாமல் விற்பவர்களுக்கு $20,000 வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மது விற்பவர்களுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.