சிங்கப்பூர் பெடோக்கில் காவல்துறையினரை கத்தியால் மிரட்டிய நபர் கைது!
பெடோக் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 37 வயது நபர் கரம்பிட் எனப்படும் வளைந்த கத்தியால் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு, பெடோக் சவுத் அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 12 அருகே இந்தச் சம்பவம் நடந்தது.
அப்போது, அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் ஒரு காரை சோதனை செய்தபோது, ஓட்டுநர் திடீரென ஆக்ரோஷமாகி, கத்தியை அதிகாரிகளை நோக்கி சுழற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் கத்தியை தனது கழுத்தில் அழுத்தினார். பலமுறை எச்சரித்தும் அவர் ஆயுதத்தை கீழே வைக்க மறுத்ததால், போலீசார் டேசர் பயன்படுத்தி அவரை கைது செய்தனர்.
இந்த நபர் மீது, பொது அதிகாரிகளைத் தடுக்க வன்முறையைப் பயன்படுத்தியதற்கு, அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததற்கும் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.